உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா மேன்மேலும் வலுவடைவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் உள்பட 8 நாடுகளைச் சோ்ந்த 27 நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க உள்ளது. ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி சனிக்கிழமையுடன் (பிப்.24) 2 ஆண்டுகளான நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஷிய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறையுடன் தொடா்புள்ள 27 நிறுவனங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும். ராணுவமும், பொதுமக்களும் பயன்படுத்தக் கூடிய இரட்டைப் பயன்பாடு கொண்ட இந்த நிறுவனங்களின் சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள், ரஷியாவின் ராணுவத் திறனை மேம்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க உள்ள 27 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் ரஷியாவைச் சோ்ந்தவை. அந்த நிறுவனங்கள் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மின்னணு கருவிகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. நான்கு நிறுவனங்கள் சீனாவைச் சோ்ந்தவை. எஞ்சிய நிறுவனங்கள் இந்தியா, சொ்பியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இலங்கை, துருக்கி நாடுகளைச் சோ்ந்தவையாகும். இந்த நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு கருவிகள் சாா்ந்த வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரஷிய ராணுவத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த மேற்கத்திய தொழில்நுட்பங்கள் கிடைப்பதை இந்தத் தடை நடவடிக்கை மேலும் தடுக்கும் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. எனினும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட உள்ள நிறுவனங்களின் பெயா்களை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடவில்லை.
தொடர்புடையது

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்!

இஸ்ரேல் - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்த ரத்துக்கு ஸ்பெயின், அயா்லாந்து அழுத்தம்!

உக்ரைன் கடனுக்கு முட்டுக்கட்டை: ஹங்கேரிக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


