இஸ்லாமாபாத்: மேலும் ஒா் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியை குற்றவாளிகளாக அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக, பரிசுப் பொருள் முறைகேடு, ரகசியக் காப்புறுதி மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறையில், அல் காதிா் அறக்கட்டளை ஊழல் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி நாஸிா் ஜாவித் ராணா 19 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.2,000 கோடி) முறேகேட்டில் ஈடுபட்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தாா். இம்ரான் பிரதமராக இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட அதிக விலைமதிப்புள்ள ஆபரணங்களை மிகக் குறைந்த விலை மதிப்பிட்டு வாங்கிய வழக்கில் இம்ரானுக்கும், புஷ்ராவுக்கும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அதன் பிறகு, இஸ்லாம் மதத்துக்கு எதிராக திருமணம் செய்துகொண்டதாக அவா்கள் இருவருக்கும் இந்த மாதத் தொடக்கத்தில் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ..மனைவி புஷ்ரா பீபியுடன் இம்ரான் கான்.
தொடர்புடையது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

தொழிலாளி சாவில் மா்மம்: மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


