சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உணவுக்கான காத்திருப்பு: இஸ்ரேலின் கொடூர தாக்குதல்

உணவு தேடிய மக்கள் மீது இஸ்ரேல் படையின் கொடூர தாக்குதல்

News image
இலவச உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் (கோப்புப் படம்)- AP
Updated On :29 பிப்ரவரி 2024, 1:51 pm

DIN

காஸா நகரத்தில் உணவு பொருள்களாக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் அதிகமானோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அமைச்சகம், இஸ்ரேல் ராணுவம் மக்கள் திரள் நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.

ஆனால் சம்பவ இடத்திலிருந்தவர்கள். உதவி பொருள்கள் வந்த டிரக்கிலிருந்து மாவு மற்றும் கேனில் அடைக்கப்பட்ட பொருள்களைப் பாலஸ்தீனர்கள் எடுக்க முயன்றபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

உதவி பொருள்கள் ஏற்றி வரும் டிரக்குகளுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்

உதவி பொருள்கள் ஏற்றி வரும் டிரக்குகளுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்

போர் தொடங்கியபோது, காஸாவின் நகரப்பகுதி மற்றும் வடக்கு காஸாவின் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலில் உள்ளாகின.

இந்த பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டதோடு உணவு கொண்டுவரும் டிரக்குகள் இந்த மாதத்தில் பெரியளவில் வருவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் திரள் கட்டுக்குள் வராமல் இருந்தது.

இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் ராணுவம்

காஸாவின் பெரும்பாலான பகுதிகளில் உதவி பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் இன்னும் சவால் நீடிப்பதாக அமைப்புகள் தெரிவிக்கின்றன. சட்ட ஒழுங்கின்மை மற்றும் விரக்தியில் உள்ள மக்கள் டிரக்குகளை வழிமறித்து தங்களுக்கான பொருள்களை எடுத்து கொள்வது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

போர் தொடங்கியது முதல் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.