முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப் படம்.

Updated On :6 ஜனவரி 2024, 8:28 pm IST

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளனர்.

காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 256 பேர் காயமடைந்துள்ளனர். 

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,722-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 58,166 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காஸா நகரில் உள்ள ஒரு பகுதியை தங்கள் படைகள் சோதனை செய்ததாகக் கூறினார்.

அதில் இருந்து கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.