ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

ஜனவரி 1ஆம் தேதி ஜப்பானை கடுமையான நிலநடுக்கம் தாக்கிய நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியிருக்கிறது.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்


ஜனவரி 1ஆம் தேதி ஜப்பானை கடுமையான நிலநடுக்கம் தாக்கிய நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியிருக்கிறது.

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 6 புள்ளிகள் என்ற அளவில் பதிவாகியிருக்கும் நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷுவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100 பேரை மீட்புப் படையினர் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 9 நாள்களுக்குப் பிறகும், நூறுக்கும் மேற்பட்டோரைத் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்த நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும்,

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தவிர, 559 போ் காயமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com