‘நம்பிக்கையோடு இருங்கள்’ : ஜப்பான் பிரதமர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார் பிரதமர்.
மீட்கப்பட்ட மக்களிடம் பேசிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா | AP
மீட்கப்பட்ட மக்களிடம் பேசிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா | AP

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மையப் பகுதியான நோடாவுக்கு முதன்முறையாகச் சென்றுள்ளார்.

ஜனவரி 1 ஆம் தேதி ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலாம நிலநடுக்கம் பலத்த பாதிப்பை உண்டாக்கியது. இதில் 220 பேர் பலியாகினர். 26 பேர் காணாமல் போய் உள்ளனர். கட்டடங்கள், சாலைகள் தகர்ந்துள்ளன. 

20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அருகிலுள்ள பள்ளிகளிலும், சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மீட்பு பணியாளர்களிடம் பேசும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா | AP
மீட்பு பணியாளர்களிடம் பேசும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா | AP

மீட்புப் பணிகள் மெதுவாக நடந்து வருவதாகவும் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மீட்கப்பட்ட மக்களைச் சந்தித்த பிரதமர் அவர்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொள்வதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பிரதமர் ஃபுமியோ, “எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com