அமெரிக்கா: சூழலியல் சிறப்பு தூதர் விலகல்
சூழலியல் சிறப்பு தூதர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவின் நீண்டகால செனட் அவையின் உறுப்பினரும் சூழலியல் சிறப்பு தூதருமான ஜான் கேரி, வருகிற வாரங்களில் ஜோ பைடன் நிர்வாகத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாசசூட்ஸ் மாகாணத்தை 28 ஆண்டுகளாக நாடாளுமன்ற அவையில் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஜான், 2004 ஜனநாயகவாத கட்சியின் அதிபர் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தார்.
2015- பாரிஸ் சூழலியல் கொள்கையின் வடிவமைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்ட ஜான், உலகளவில் சூழலியல் சார்ந்து அறியப்படுகிற ஆளுமையாக உள்ளார். ஓபாமாவின் ஆட்சியிலும் செயலராகப் பணியாற்றியுள்ளார்.
“சூழலியல் விவகாரம் என்பது மனித இனத்தின் மீதான உலகளாவிய ஆபத்து, அதனை விரைவாக கையாள வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது” என பீஜிங் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தைவான் அதிபா் தோ்தலில் சீன எதிா்ப்பாளா் வெற்றி
அமெரிக்காவின் மிகப்பெரிய சூழலியல் மாற்றத்திற்கு வழிவகுத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீட்டு செய்யும் திட்டத்தில் பங்காற்றியுள்ளார். இது உள்ளூர் தயாரிப்புகளை மட்டும் முதன்மைபடுத்தியதால் விமர்சனத்துக்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...