வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சில மைல் தொலைவில் உணவு... மக்கள் பட்டினியால் பலியாவதா?: ஐநா கேள்வி

காஸாவின் மக்கள்தொகையில் 5 லட்சத்துக்கும் அதிகமான பேர் பட்டினியால் பாதிக்கப்படுவதாக ஐ.நா தெரிவித்தது.

News image
உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் டிரக் | AP
Updated On :15 ஜனவரி 2024, 4:14 pm

DIN

காஸாவுக்கு அதிகமான வாழ்வாதார உதவிகள் தேவை, இல்லையெனில் ஏற்கெனவே பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனர்கள் இன்னும் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள் என ஐ.நாவின் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஐநாவின் மூன்று அமைப்புகள் நேரடியாக இஸ்ரேலைக் குற்றம் சாட்டவில்லையெனினும் வாழ்வாதார பொருள்களை அனுமதிக்கும் எல்லை பகுதிகள் குறைவாக இருப்பதும் சோதனையிட அதிக நேரம் எடுத்து கொள்வதும் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குவதாக அவர்கள் குறிப்பிட்டு்ள்ளனர்.

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் 101-வது நாளாக தனது போர் நடவடிக்கையைத் தொடர்ந்து வருகிறது. 23 லட்சம் கொண்ட காஸா மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர் வீட்டை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமான பேர் பட்டினியால் பாதிக்கப்படுவதாக ஐநா தெரிவித்தது.

சில மைல் தூரத்தில் உணவு பொருள்கள் இருந்தும் மக்களை, பட்டினி சாவுக்கு இழக்கும் நிலை நீடிப்பதாகவும் ஒவ்வொரு மணிநேரமும் கணக்கில்லாத உயிர்களை இடரில் வைத்திருப்பதாகவும் உலக உணவு திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராபா எல்லையில் உள்ள தற்காலிக முகாம்கள் | AP

ராபா எல்லையில் உள்ள தற்காலிக முகாம்கள் | AP

உலக உணவு திட்டம், யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் காஸாவுக்கு வாழ்வாதார பொருள்கள் விரைவில் கிடைக்க வலியுறுத்தியுள்ளன.

பட்டினியில் உள்ள மக்கள் உணவு பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை வழிமறித்து அதனை எடுக்கும் விடியோ வெளியானது. உதவிகள் சீராக சென்று சேர்வதில்லை என்பதை அந்த விடியோ காட்டுகிறது.

வடக்கு காஸாவுக்கு 40 கிமீ தொலைவில் உள்ள இஸ்ரேலின் துறைமுகமான அஷ்தோட் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு ஐநா அமைப்புகள் இஸ்ரேலிடம் கோரியுள்ளன.

இஸ்ரேல் வாழ்வாதார பொருள்களின் விநியோகம் பாதிக்கப்படுவதற்கு ஐநா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. ஐநாவிடம் போதுமான பணியாளர்களோ நெறிமுறையோ இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.