பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க ஒரே வழி..! : இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பிணைக்கைதிகளை உயிரோடு மீட்டுவிட முடியாது என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம்
தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் உயிரோடு நாடுதிரும்ப வேண்டும் என்றால், இஸ்ரேல் ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சர் கதி எய்சென்காட் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். ஹமாஸ் அமைப்பை அழித்து, பிணைக்கைதிகளை மீட்கும் வரை தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒப்பந்தங்களுக்கு இடமளிக்காமல் தொடர்தாக்குதல்களை மட்டும் நடத்தினால் பிணைக்கைதிகளை பாதுகாப்பாக காப்பாற்றுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினருடனான துப்பாக்கி சண்டையில் சொந்த நாட்டு பிணைக்கைதிகள் 3 பேரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. 

கடந்த அக்டோபர் 11 ஆம் நாள் ஹெஸ்புல்லா அமைப்பைத் தாக்குவதற்காக இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளை போர் விவகாரத்துறை அமைச்சரும், முன்னாள் தலைமை பணியாளார் பென்னி கான்ட்ஸ் இணைந்து தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 7-ல் துவங்கிய இந்த போரில் இதுவரை 24,620 பேரை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 10,000த்திற்கு அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்த தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காஸா மக்களின் வலி நீங்க எந்த வழியும் பிறக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com