போரில் பெண்கள் ஏன் பலியாகவேண்டும்? : ஐநா

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது ஐநா.
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பாகிஸ்தானிய சிறுமி | AP
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பாகிஸ்தானிய சிறுமி | AP

காஸா போரில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் எனவும் ஏறத்தாழ 16 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு மணி நேரத்துக்கு இருவர் என்கிற விகிதத்தில் உயிரிழப்பு நிகழ்வதாகவும் ஐநா பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

100 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்துவரும் போரில் குறைந்தது 3 ஆயிரம் பெண்களாவது தங்களின் கணவர்களை இழந்துள்ளதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தந்தையை இழந்துள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐநா முகமை, தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலின வேறுபாடு மற்றும் இடப்பெயர்வுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது.

காஸாவின் மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் 19 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 10 லட்சம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்கிறது ஐநா.

கட்டட இடுபாடுகளில் இருந்து சிறுமியை மீட்கும் பாலஸ்தீனர்கள் | AP 
கட்டட இடுபாடுகளில் இருந்து சிறுமியை மீட்கும் பாலஸ்தீனர்கள் | AP 

ஐநா பெண்கள் அமைப்பின் சிறப்பு இயக்குநர் சிமா பஹெளஸ், முன்னர் போரில் பலியானவர்களில் பொதுமக்கள் 67 சதவிகிதமாகவும் பெண்கள் பலியாவது 14 சதவிகிதமாகவும் இருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளது கொடூரமான மாற்றம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம் மற்றும் தங்குமிடம்  ஆகியவை பறிக்கப்பட்டுள்ளதாகவும் பசி மற்றும் பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்வதாகவும் கவலை தெரிவித்தார். 

மேலும், ஹமாஸ் இஸ்ரேலில் மேற்கொண்ட தாக்குதலில், மனசாட்சியற்ற பாலியல் வன்முறை அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.

மேற்கு கரையில் தனது மகனை இழந்த தாய் | AP
மேற்கு கரையில் தனது மகனை இழந்த தாய் | AP

ஐநாவின் பொதுச் செயலர் ஆண்டானியோ குட்டரெஸின் கருத்தை வலியுறுத்தி உடனடி போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்புக்கான கோரிக்கையை ஐநாவின் பெண்கள் அமைப்பு முன்வைத்துள்ளது.

“இது அமைதிக்கான நேரம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். இது அவர்களின் போர் கிடையாது. அவர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார் சிமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com