

மாலத்தீவில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல இந்தியா வழங்கிய டோரினியர் விமானத்திற்கு மிகத் தாமதமாக அனுமதியளிக்கப்பட்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அந்த சிறுவனுக்கு மூளைக் கட்டி காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை மாலத்தீவு தலைநகரான மாலிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோர் விமான அவசர ஊர்தி கேட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதிகாரிகள் தகுந்த நேரத்தில் உதவி செய்யாததால் 16 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: இளைஞர் பலி: காவலர்கள் மீது உள்ளூர் மக்கள் ஆவேசம்
இதுபோன்ற மருத்துவ அவசர உதவிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனமான ஆசந்தா, கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்று வந்த விவகாரத்தில் இந்தியா, மாலத்தீவு இடையே மோதல்கள் ஏற்பட்டுவந்த நிலையில், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாலத்தீவு எம்பி மீகாலி நசீம், மாலத்தீவு அதிபரின் விரோதத்திற்காக மக்கள் ஏன் சாக வேண்டும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.