பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்றிணையும் இந்தியா, பிரான்ஸ்!

பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இடையேயான சந்திப்பில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடியரசு நாள் விழாவில் மோடி மற்றும் மேக்ரான் | PTI
குடியரசு நாள் விழாவில் மோடி மற்றும் மேக்ரான் | PTI

புது தில்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு தொழிற்துறை சார்ந்த எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றிணைகிற முடிவு இரு நாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்களுக்கான முக்கிய வன்பொருள்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணை மேம்பாடு மற்றும் இணை தயாரிப்பு ஆகியவற்றையும் விண்வெளி, நில மேம்பாடு, இணைய (சைபர்) வெளி, செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவிருக்கும் திட்டங்கள் பற்றியும் தலைவர்கள் பேசியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேக்ரான் இடையேயான பேச்சுவார்த்தையின் குறிப்புகளை வெளியுறவு துறை செயலர்  வினய் குவாத்ரா வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

மேலும், டாடா மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹெச்125 உலங்கூர்திகளைக் குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாகங்களுடன் வடிவமைக்கவுள்ளார்கள்.

இந்த பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டம், இயந்திர தொழில்நுட்பம் (ரோபோட்டிக்ஸ்), சுயாதீன வாகனங்கள் மற்றும் இணைய (சைபர்) பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

செயற்கைகோள் ஏவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நியூ ஸ்பேஸ் இந்தியா மற்றும் பிரான்ஸின் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இருவருக்கிடையேயான பேச்சுவார்த்தையில் காஸாவின் பயங்கரவாதம், மனிதநேய விளைவுகள் ஆகியவைக் குறித்தும் செங்கடலில் அதிகரித்துவரும் பதட்டமும் தீர்வும் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக குவாத்ரா தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் இரு நாள் பயணத்திட்டமாக இந்தியா வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com