சியோல் : கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அதற்கு பதிலடியாக வடகொரியா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தொடர்ந்து எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை நிகழ்த்தியிருப்பதாக தென் கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியது.
அந்த வகையில், வடகொரியா இந்த ஆண்டு நடத்தியுள்ள மூன்றாவது கட்ட எறிகணை சோதனை முயற்சி இதுவாகும். முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்த எறிகணையின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை தென்கொரிய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


