கனடா: இந்திய வம்சாவளி மாணவரை சுட்டுக்கொன்ற வழக்கில் மற்றொரு இந்திய வம்சாவளி இளைஞர் கைது
கனடாவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஒட்டாவா : கனடாவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் வசித்து வந்த நிஷான் திண்ட்(18 வயது) என்ற இந்திய வம்சாவளி மாணவரை, கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் வைத்து சுட்டுவிட்டு சிலர் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிஷான் திண்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகப்படும் இந்திய வம்சாவளி மாணவர் ப்ரீத்பால் சிங்(18 வயது) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 16 வயதே நிரம்பிய மாணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த நபரை குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...