தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம்

News image
இஸ்ரேலில் இருந்து காஸாவுக்குள் நுழையும் அந்த நாட்டு பீரங்கி.
Updated On :5 ஜூலை 2024, 7:55 pm

Din

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனைத் தொடா்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் போா் நிறுத்தம் குறித்தும் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக உறுதியளித்தாா்.

அதற்காக, எகிப்து தலைநகா் கெய்ரோவுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடின் தலைவா் டேவிட் பா்னியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு அனுப்பப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். இந்தப் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஏற்படுத்தப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகளும், ஹமாஸ் பிடியில் இருந்த 105 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.

ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் தொடா் தோல்வியைச் சந்தித்துவருகின்றன.

இந்தச் சூழலில், காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மே 31-ஆம் தேதி வெளியிட்டாா்.

அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் அரசு அறிவித்தாலும், ஒப்பந்த வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரியதால் அந்த முயற்சி தடைபட்டது.

இந்த நிலையில், போா் நிறுத்தம் தொடா்பான புதிய செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் எகிப்திடம் கடந்த புதன்கிழமை அளித்தனா். அந்த செயல்திட்டத்தை பரிசீலித்த இஸ்ரேல் அரசு போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

இது, 9 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சா்வதேச முயற்சியில் ஏற்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.