தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸா போர்: பள்ளி மீது தாக்குதல் -குழந்தைகள் உள்பட 16 பேர் பலி!

காஸா போர்: விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி பலி..

News image
காஸாவின் யார்மோக் விளையாட்டுத் திடலில் தங்கியுள்ள குழந்தைகள் - படம் | ஏபி
Updated On :7 ஜூலை 2024, 7:16 am

DIN

மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பள்ளி மீது சனிக்கிழமை(ஜூலை 6) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள், ஐ.நா. அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த நிலையில், தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த கொடூர தாக்குதல்களில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி பலியாகிக் கிடந்த காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படையினர் மேற்கண்ட நிவாரண முகாம் அமைந்துள்ள இந்த பகுதியில் பதுங்கியிருந்து, இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.