நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நேபாளத்தில் முக்கிய நீராதாரமான கோஷி மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
காத்மாண்டு, பக்தபூர், லைத்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஞாயிற்றுக்கிழமை பகல் வரையிலான கடந்த 36 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் வெள்ளத்தில் மாயமானதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஜூன் பிற்பகுதியிலிருந்து பருவமழை தொடங்கியதிலிருந்து, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் | ஏபி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டங்களுக்கு விஎச்பி வலியுறுத்தல்

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



