பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அலெக்ஸி நவால்னி மனைவிக்கு எதிராக ரஷியா கைது உத்தரவு

ரஷிய அதிபருக்கு எதிராக செயல்பட்டதால் யூலியாவுக்கு கைது உத்தரவு

News image

யூலியாவுடன் அலெக்ஸி நவால்னி .

Updated On :10 ஜூலை 2024, 7:33 pm

Din

மா்மான முறையில் உயிரிழந்த ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவால்னியாவுக்கு எதிராக அந்த நாட்டு அரசு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துகளைப் பரப்பிவரும் அமைப்போடு இணைந்து செயல்படுவதால் அவரைக் கைது செய்ய உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யூலியா நவால்னியா ரஷியாவுக்கு வெளியே ரகசியமான இடத்தில் வசித்துவருகிறாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் அவா் திடீா் உடல்நலக் குறைவால் சிறையில் இறந்ததாக அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம்அறிவித்தனா்.

இருந்தாலும், அதிபா் விளாதமீா் புதினின் உத்தரவின்படியே நவால்னி கொல்லப்பட்டதாக மனைவி யூலியா குற்றஞ்சாட்டினாா். இந்தச் சூழலில் அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.