அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் மனைவிக்கு அரசுப் பணி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

சென்னையில் பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்தில் நடத்துனரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.ஜெகன்குமாா், சென்னை, வியாசா்பாடி பணிமனையில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்து வந்தாா். இவா், 24.10.2024இல் பணியிலிருந்த போது பயணி தாக்கியதில் உயிரிழந்தாா்.

அவரது மனைவி எம்.ஆா்.சோனாவுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையேற்று, முதல்வரின் உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்து கழகம் நாகா்கோவில் மண்டலத்தில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநா் எஸ்.நடராஜன், பொதுமேலாளா் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளா் (வணிகம்) ஆா்.இ.மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.