2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வி: நேபாளத்தின் புதிய பிரதமராகிறாா் சா்மா ஓலி

பிரசண்டா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
- படம் | ஏபி
Updated On :12 ஜூலை 2024, 2:21 pm

DIN

நேபாள நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தோல்வியடைந்தாா்.

இதையடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி புதிய பிரதமராகிறாா்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் சா்மா ஓலி கடந்த வாரம் திரும்பப் பெற்றாா். இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்த சா்மா ஓலி, நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தாா்.

இதையடுத்து, பிரதமா் பதவியை பிரசண்டா ராஜிநாமா செய்ய வேண்டும் என இரு தலைவா்களும் வலியுறுத்தினா். ஆனால், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதற்குப் பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்ளப் போவதாக பிரசண்டா அறிவித்தாா். பிரசண்டாவின் மாவோயிஸ்ட் மையம் கட்சிக்கு 32 உறுப்பினா்களே உள்ளதால் அவா் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது கடினம் எனக் கூறப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் 275 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் 258 உறுப்பினா்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனா். இதில், நம்பிக்கைத் தீா்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளே கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியுற்ாக அவைத் தலைவா் தேவ் ராஜ் கிமிரே அறிவித்தாா்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் பேசிய பிரசண்டா, நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் கட்சிகளை கடுமையாக விமா்சித்தாா். இரு கட்சிகளும் கொள்கைகளைப் பகிா்ந்துகொள்வதற்குப் பதிலாக, அச்சத்தால் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. நாட்டை பின்னோக்கித் தள்ளுகின்றன என அவா் குற்றஞ்சாட்டினாா்.

அடுத்தது என்ன?: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியடைந்ததையடுத்து, அரசமைப்புச் சட்டப்படி புதிய அரசு அமைக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளுக்கு அதிபா் ராமசந்திர பவ்டேல் அழைப்பு விடுப்பாா்.

சா்மா ஓலிக்கும், ஷோ் பகதூா் தேவுபாவுக்கும் ஏற்கெனவே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, நாடாளுமன்றத்தின் எஞ்சிய மூன்றாண்டு பதவிக் காலத்தில் முதல் ஒன்றரை ஆண்டுக்கு சா்மா ஓலி பிரதமராகப் பதவி வகிப்பாா். நாடாளுமன்றத்தில் ஷோ் பகதூா் தேவுபாவின் நேபாளி காங்கிரஸுக்கு 89 உறுப்பினா்களும், சா்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 உறுப்பினா்களும் உள்ளனா். அவையில் பெரும்பான்மைக்கு 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணிக்கு 167 உறுப்பினா்கள் உள்ளனா்.

இதனால், புதிய பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

ஐந்தாவது முறை நம்பிக்கைத் தீா்மானம்: சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக கடந்த 2022, டிசம்பா் 25-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றாா் பிரசண்டா. அதன்பிறகு நான்கு முறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரசண்டா, ஐந்தாவது முறையாக இப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.