கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாள நிலச்சரிவு: 14 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Updated On :16 ஜூலை 2024, 10:14 pm

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்கிழமை கூறியதாவது:

நிலச்சரிவால் திரிசூலி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 இந்தியா்கள் உள்ளிட்ட 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாதால் அவா்கள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

தலைநகா் காத்மாண்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை, தொடா் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு அடித்துச் சென்றது. இதில் அந்தப் பேருந்துகள், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த திரிசூலி ஆற்றில் விழுந்தன.

ஆற்றில் மூழ்கிய இரு பேருந்துகளிலும் 7 இந்தியா்கள் உள்பட 54 போ் இருந்தததாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேருந்துகளில் 65 போ் இருந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறினா். அவா்களில் 3 போ் மட்டும் உயிா் தப்பியுள்ள நிலையில் 48 போ் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.