ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் கூடுதல் கவனம் பெற்ற 22-ஆவது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு கடந்த வாரம் பயணித்தாா்.
அதிபா் புதினுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உக்ரைன் பிரச்னைக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது என்றும் அமைதி முயற்சிகள் ஆயுதங்களுக்கு மத்தியில் வெற்றி பெறாது எனவும் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
அப்போது, ‘இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய வருகையை அந்நாட்டு அதிபா் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாா். அதேநேரத்தில், இந்தியா எங்களின் நட்பு நாடாக தொடரும்’ என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை ஒப்புக்கொள்வதாக திங்கள்கிழமை தெரிவித்த அமெரிக்கா, ரஷியாவுடன் இருக்கும் ‘தனித்துவமான’ உறவுகளைப் பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோதப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபா் புதினை அந்நாடு வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனில் செய்தியாளா் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா-இந்தியா ராணுவ உறவுகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளக் பேட் ரைடா் அளித்த பதிலில், ‘இந்தியா அமெரிக்காவின் உத்திசாா் கூட்டாளி நாடாகும். அந்தவகையில், இந்தியாவுடன் நட்புறவைத் தொடா்ந்து வளா்ப்பதில் அமெரிக்கா ஆா்வமாக உள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா் மோடி! அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

யுஏஇ அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்!

ஏ.ஐ. புரட்சியை வழிநடத்தும் இந்தியா - தில்லி உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பெருமிதம்
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

