லெபனானில் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் -இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
லெபனானில் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்


லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இஸ்ரேலை ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் குழந்தைகள் உள்ளிட்ட இளம் பருவத்தினர் என்று தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லெபனான் நாட்டிலிருந்து செயல்பட்டு வரும் ஈரான் பின்புலத்திலுள்ள ஹிஸ்புல்லா படைகள் இந்த கொடூர தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாதென ஹிஸ்புல்லா மறுப்பு தெரிவித்துள்ளது.
காஸாவின் மத்திய பகுதியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளியில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை(ஜூலை 27) நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே கோலன் ஹைட்ஸ் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா படையை சார்ந்த 4 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் இதுவாகும் என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பதிலடியாக லெபனான் எல்லைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் திரும்பியவுடன் அவரது தலைமையில் பாதுகாப்பு கேபினட் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி தராமல் விடமாட்டோம், இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா கடும் விலை கொடுக்க நேரிடும் என நெதன்யாகு எச்சரித்துள்ளதால் காஸாவை தொடர்ந்து லெபனான் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கிழக்கு லெபனானின் டாரய்யா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இஸ்ரேலை ஈரான் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...