காஸாவின் மத்திய பகுதியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளியில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:காஸாவின் டேயிா் அல்-பாலா நகரிலுள்ள பெண்களுக்கான பள்ளியில் ஆயிரக்கணக்கான புலம் பெயா் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
அந்த வளாகத்துக்குள் மருத்துவ மையம் ஒன்றும் செயல்பட்டுவருகிறது.அந்த பள்ளிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை விமானம் மூலம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்தவா்கள் அல் அக்சா மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
அவா்களில் 30 போ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தவிர, இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஹமாஸ் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தினோம். அந்தப் பள்ளி வளாகம் ஹமாஸ் அமைப்பினரின் பதுங்குமிடமாகவும் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதற்கான இடமாகவும் பயன்படுத்தப்ப்டடுவந்தது.
இது தவிர, அந்த வளாகத்துக்குள் ஏராளமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் மேலும் 12 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது மற்றும் கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா், இஸ்ரேல் நாடுகளின் பிரதிநிதிகள் இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) ஆலோசனை நடத்துகின்றனா்.அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் அமைப்பினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், சுமாா் 250 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.இதில் இதுவரை 39,258 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 90,589 போ் காயமடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

லெபனானில் இஸ்ரேல் தொடா் தாக்குதல்: மேலும் 12 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


