
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”இந்தியா - இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
அதேபோல, பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமரும், மொரிஷியஸ் பிரதமரும், இலங்கை அதிபரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.