
ஆப்கன்
ஐஏஎன்எஸ்

ஆப்கன்
ஐஏஎன்எஸ்
ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள 11 வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் புதுப்பிக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் தகவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை காலத்தால் அருகிவரும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு காந்தஹர் மாகாணத்தில் உள்ள இரண்டு இடங்கள், வடக்கு ஹெரட்டில் உள்ள 9 இடங்கள் ஆகிய 11 இடங்களில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார வளங்கள் மற்றும் அவசியமான ஏற்பாடுகளுக்கு பிறகு பணி தொடங்குமென ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கனின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான வரலாற்று இடங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...