இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: காஸா பள்ளியில் 39 பேர் பலி!
இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் காஸாவின் பள்ளியில் 39 பேர் பலியாகியுள்ளனர்.


இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நேற்று இரவு காஸாவின் பள்ளியில் தங்கியிருந்த 39 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த ஐ.நா பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று காலை காஸாவின் நுசெரத் பகுதியில் தாக்குதல் குறித்துவெளியான தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளன. எனவே, தாக்குலில் இறந்தவர்கள் குறித்து உறுதியாகத் தெரியாமல் போனதாக காஸாவின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை குறைந்தது 39 பேர் இறந்ததாக அறிவித்துள்ள ஹமாஸின் அல்-அக்ஸா தொலைக்காட்சி நிறுவனம் முழுமையான தகவல்களை வழங்கவில்லை. பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா, குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 12-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நடத்தும் பள்ளியை போர் விமானங்கள் மூலம் தாக்கியதாகக் கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் அமைப்பினரும், இஸ்லாமிய ஜிஹாத்தும் தங்கள் குற்றச்செயல்களுக்கு பள்ளியைப் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டியுள்ளது.

"தாக்குதலுக்கு முன்னர், பொதுமக்களுக்கு ஆபத்து வராத முறையில் வான்வழி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் மூலம் கண்காணித்தே தாக்குதல் முடிவுகள் எடுக்கப்பட்டன" என்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அக். 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டு, 250 பேர் பணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின் இந்த போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் குறைந்தது 36,000 பாலஸ்தீனர்களை இதுவரைக் கொன்றுள்ளது. மேலு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன மேற்கு கடற்கரைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...