ஆப்கன் குற்றவாளிகளை திரும்ப பெற ஒத்துழைப்பு தருவதாக தலிபான் அறிவிப்பு!

ஆப்கன் குற்றவாளிகளை மீண்டும் பெற ஆப்கன் தலிபான் அரசு ஒத்துழைப்பு - ஜெர்மனிக்கு பதில்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜெர்மனில் உள்ள ஆப்கன் குற்றவாளிகளை நாடு கடத்த ஒத்துழைப்பு தருவதாக ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா உள்பட ஜெர்மனி பாதுகாப்பற்றதாக கருதும் நாடுகளை சேர்ந்த குற்றவாளிகளை நாடு கடத்துவதை விரும்புவதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆப்கன் குடியுரிமை பெற்ற நபர் ஜெர்மனியில் காவல் அதிகாரியை கொன்ற சம்பவம் விவாத பொருளானதையடுத்து ஜெர்மன் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான குழுவின் பேரணியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இத்தகைய குற்றவாளிகள் நாடுகடத்தப்பட வேண்டும் அவர்கள் சிரியா, ஆப்கனில் இருந்து வந்திருந்தாலும் சரி என பிரதமர் பாராளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

இதர்கு தலிபான் அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் காஹர் பால்சி எக்ஸ் வலைத்தளத்தில் இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி பொருத்தமான முறையில் ராஜ்ய நடைமுறைகள் வழியாக எதிர்கொள்ளுமாறு தாலிபன் அரசு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

2021 ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் ஜெர்மனி யாரையும் திருப்பி அனுப்பவில்லை. அதற்கு முன்பும்கூட குற்றவாளிகள், நாட்டிற்கு தீங்கு உருவாக்குபவர்களை மட்டும் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது.

சர்வதேசளவில் ஆப்கனில் அமைக்கப்பட்டுள்ள தலிபான் அரசு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஜெர்மனியின் இந்த பேச்சுவார்த்தைக்கு அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com