
ஆஸ்திரேலியாவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையைக் கொன்று, சமைத்து சாப்பிட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
வடக்கு ஆஸ்திரேலியாவின் ஒரு கிராமத்தில், சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, மேற்கத்திய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தினால் அடித்து வரப்பட்ட பல முதலைகள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன. அதாவது, மக்கள் நடமாடும் பகுதிகளில் முதலைகளும் நடமாடுவதாய் இருந்தன.
இந்நிலையில், மக்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து 250மீ தொலைவில் 3.63மீ நீளமுள்ள உப்புநீர் முதலை ஒன்று, பெய்ன்ஸ் ஆற்றிற்கு அருகில் வரும் பொதுமக்களை துரத்தி, தொல்லையும் செய்துள்ளது. மேலும், அப்பகுதியில் இருக்கும் தெருநாய்களையும் கொன்று, தின்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் கவலையுற்ற அப்பகுதி மக்கள், முதலையினால் ஏற்படுகிற பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர கலந்தாலோசித்தனர். ஆலோசனையின் முடிவில், முதலையை கொல்வது மட்டுமே தீர்வாகும் என முடிவெடுத்துள்ளனர்.
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து முதலையைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதுமட்டுமன்றி, கொல்லப்பட்ட முதலையை அருகிலிருந்த பழங்குடியினர் வாழும் பகுதிக்குக் கொண்டு சென்று, அந்த முதலையை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.