
தென்கிழக்கு வங்கதேசத்தில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால் உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த குறைந்தது 9 பேர் பலியானதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகதிகள் மறுவாழ்வு துறையின் கூடுதல் ஆணையர் முகமது சம்சுதுஷா, காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம் எண் 9 மற்றும் 10 நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை முதல் கடும்மழை பொழிந்துவரும் மாவட்டத்தில் ரோஹிங்கியா மக்கள் 33 முகாம்களில் தங்கியுள்ளனர். அபாயமான பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக முகமது சம்சுதுஷா தெரிவித்தார்.
கடும் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வங்கதேசத்தின் மலைப்பகுதிகள் அதிக மழையை எதிர்கொள்கின்றன. இந்தப் பகுதிகளில் விவசாயத்துக்காகவும் வீடு கட்டவும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.