12-வது குழந்தைக்குத் தந்தையான எலான் மஸ்க்!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூராலிங்க் நிறுவனங்களின் தலைவரான தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 12-வது குழந்தைக்குத் தந்தையானதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Published on
Updated on
1 min read

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூராலிங்க் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், நியூராலிங்க் நிறுவனத்தின் நிர்வாகியுடன் தனது 12-வது குழந்தையை ரகசியமாகப் பெற்றெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூராலிங்க் நிறுவன சிறப்புத் திட்டங்களின் தலைவரான ஷிவோன் சில்லீஸ் என்பவருடன் தங்களது மூன்றாவது குழந்தையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெற்றெடுத்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, எலான் மஸ்க் - ஷிவோன் சில்லீஸ் இணைந்து இரட்டைக் குழந்தைகளைக் கடந்த 2021-ல் பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க், தன் முதல் மனைவியான எழுத்தாளர் ஜஸ்டின் மஸ்க்குடன் 6 குழந்தைகளும் (அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது), பாடகி கிரைம்ஸுடன் 3 குழந்தைகளும், ஷிவோன் சில்லீஸுடன் மூன்று குழந்தைகளுமாக மொத்தம் 11 குழந்தைகளுக்குத் தந்தையாவார். இதனைத் தொடர்ந்து தற்போது 12-வதாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.

உலகில் மக்கள்தொகைக் குறைவு ஏற்படும் என்றும், அதிக ஐகியூ உடையவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு

எலான் மஸ்க் தன்னிடம் பணிபுரிபவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகப் பல குற்றச்சாட்டுகள் செய்திகளில் வெளியாகியுள்ளன. தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்து பின்னர் நிர்வாகியான பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மற்றொரு நிர்வாகியிடம் தன்னுடன் இணைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள அவர் கூறியதாகவும், அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

’எலான் மஸ்க், வேண்டுமென்றே பெண்கள் மற்றும் பால்புதுமையினரை இழிவுபடுத்தும் மோசமான பாலியல் புகைப்படங்கள், மீம்கள் மற்றும் வர்ணனைகள் மூலம் பணிச்சூழலை மோசமாக்கினார்’ என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் 8 பேர் கடந்த வாரம் எலான் மஸ்க் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

மேலும், மற்றொரு குற்றச்சாட்டில் எலான் மஸ்க் விமானப் பணிப்பெண் ஒருவரை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com