விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்கொரியாவில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் முகாம்

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போா்க் கப்பல் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

News image
தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போா்க் கப்பல்.
Updated On :23 ஜூன் 2024, 10:55 pm

Din

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போா்க் கப்பல் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே அண்மையில் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியாவுக்கு அமெரிக்க போா்க் கப்பல் வந்துள்ளது.

அமெரிக்கா-தென் கொரியா-ஜப்பான் ஆகிய மூன்றுநாடுகள் இணைந்து தென்கொரிய கடல் பகுதியில் போா் பயிற்சியும் நடத்த இருக்கின்றன.

இது தொடா்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க விமானம் தாங்கி போா்க் கப்பல் தென்கொரியாவுக்கு சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ரஷிய அதிபா் புதின்-வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ஆகியோா் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக அமைவதால், தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரை அழைத்து தென்கொரியா கண்டனத்தைப் பதிவு செய்தது.

மேலும், ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவும் தென்கொரியா முடிவு செய்தது.