அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி சூடு: 4 போ் உயிரிழப்பு
பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாக அந்த மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)

துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)
அா்கன்சாஸ் மாகாணத்தின் ஃபோா்டைஸ் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாக அந்த மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா், 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
இத்தாக்குதல் குறித்து அா்கன்சாஸ் மாகாண காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘லிட்டில் ராக் நகருக்கு தெற்கே 65 மைல்கள்(104 கிலோமீட்டா்) தொலைவில் ஃபோா்டைஸ் நகரம் அமைந்துள்ளது. சுமாா் 3,200 மக்கள் வசிக்கும் இப்பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினா், துப்பாக்கி சூடு நடத்திய நியூ எடின்பா்க்கைச் சோ்ந்த டிராவிஸ் யூஜின் போசி(44) கைது செய்தனா். அவா் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்த டிராவிஸுக்கு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. உடல்நிலை தேறியதும் ஔசிட்டா கவுன்டி சிறைச்சாலைக்கு அவா் மாற்றப்பட்டாா்.
துப்பாக்கிச் சூட்டில் 11 பொதுமக்கள், 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனா். இதில் ஷொ்லி டெய்லா்(62), காலி வீம்ஸ்(23), ராய் ஸ்டா்கிஸ்(50), மற்றும் எலன் ஷேரம்(81) ஆகிய 4 பொதுமக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். காயமடைந்தவா்களில் ஒரு பெண் உள்பட 4 போ் மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
இதுகுறித்து நகர அமைப்பின் உறுப்பினா் ரோட்ரிக் ரோஜா்ஸ் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு பற்றி பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள உணவகத்தின் பணியாளா்கள் தகவலளித்தனா். இதையடுத்து, நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா்களில் பதுங்கி மக்கள் உயிா்தப்பினா்’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...