ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தென் கொரியாவில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 16 பேர் பலி

ஹ்வாசோங் நகரில் பேட்டரி தொழிற்சாலையில் தீ: பலர் காயம்

News image
புகைப்படம் நன்றி: ஏபி நியூஸ்.
Updated On :24 ஜூன் 2024, 9:21 am

DIN

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.

சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திங்கள்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். மேலும் 6 பேரைக் காணவில்லை.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் உட்பட வெளிநாட்டினர் என்று உள்ளூர் தீயணைப்பு அதிகாரி கிம் ஜின்-யங் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 102 பேர் பணிபுரிந்தனர்.

இறந்தவர்கள் தரையில் படிக்கட்டுகள் வழியாக தப்பிக்க தவறியிருக்கலாம்.

காணாமல் போனவர்களின் மொபைல் போன் சிக்னல்கள் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் தென்பட்டது. தொழிலாளர்கள் ஆய்வு செய்து பேக்கேஜிங் செய்யும் போது பேட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக ஒருவர் கூறினார்.

இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பபடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.