முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

குப்பை பலூன்களை பறக்கவிட்டு தென் கொரியாவை மிரட்டும் வட கொரியா!

தென்கொரியாவை நோக்கி குப்பைகள் அடைக்கப்பட்ட பலூன்களை பறக்கவிடும் வடகொரியா!

வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள் - படம் | ஏபி

Updated On :

வட கொரியாவிலிருந்து கடந்த 9-ஆம் தேதியன்று இரவில் 300க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்கவிட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் அதேபாணியிலான நடவடிகைகளை வட கொரியா முன்னெடுத்திருப்பதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

வட கொரிய எல்லையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசுபாட்டை தென் கொரியா ஏற்படுத்தியது. வட கொரியா மீதான உளவியல் ரீதியிலான தாக்குதலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த வெள்ளியன்று தென் கொரிய செயற்பாட்டாளர்கள் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை எல்லை தாண்டி அந்நாட்டு எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவத்துக்கு பதிலடியாக வட கொரியா பலூன் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவை நோக்கி குப்பைகள் அடைக்கப்பட்ட பலூன்கள் வடகொரியாவிலிருந்து அனுப்பப்படுவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.