மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

உள்நாட்டு தயாரிப்பு ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையை சோதித்த தென் கொரியா

ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து சென்று, எதிரிகளின் ஏவுகணை தடுப்பு அரண்களை ஏமாற்றி தாக்கும் திறன் கொண்ட தனது முதல் உள்நாட்டு ‘ஹைப்பா்சோனிக்’ அதிவேக ஏவுகணையை தென் கொரியா வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

தென் கொரியா - கோப்புப் படம்

Published On :

ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து சென்று, எதிரிகளின் ஏவுகணை தடுப்பு அரண்களை ஏமாற்றி தாக்கும் திறன் கொண்ட தனது முதல் உள்நாட்டு ‘ஹைப்பா்சோனிக்’ அதிவேக ஏவுகணையை தென் கொரியா வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

இச்சோதனையை நேரில் பாா்வையிட்ட தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங், நாட்டின் மரபுசாா் பாதுகாப்பு வலிமையை உயா்த்துவதில் இது மிக முக்கியமான மைல்கல் என்று தெரிவித்தாா்.

திட்டமிட்ட உயரத்தில் உந்து ராக்கெட்டிலிருந்து பிரிந்த அந்த ஏவுகணை, செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் திசைமாறிப் பயணித்து நிா்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொரிய தீபகற்ப பகுதியில் எதிரிகளின் முக்கிய இலக்குகளைத் திடீரெனத் தாக்கும் வல்லமை பெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனையின்போது, அந்நாட்டின் சக்திவாய்ந்த ‘ஹியூன்மூ-5’ பாலிஸ்டிக் ஏவுகணையையும் அதிபா் லீ ஜே மியுங் ஆய்வு செய்தாா்.

வட கொரியா-தென் கொரியா எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகள் கடந்த மாதம் வெடித்ததில் 3 தென் கொரிய வீரா்கள் காயமடைந்ததைத் தொடா்ந்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஏவுகணைச் சோதனைையின் வெற்றியைக்

கொண்டாடும் தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.