ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அதிகரிப்பு: அமெரிக்கா

இந்தியாவில் மதமாற்றச் சட்டங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரிப்பு: அமெரிக்கா

News image
Updated On :27 ஜூன் 2024, 7:49 pm

Din

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றச் சட்டங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தாா்.

‘சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆண்டறிக்கையை’ அவா் புதன்கிழமை வெளியிட்டாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சில மாநிலங்களில் திருமணத்துக்காக வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவா்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன.

வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் பொய் வழக்குகள் மூலம் கிறிஸ்தவா்கள் மற்றும் இஸ்லாமியா்கள் கைது செய்யப்படுவதாகவும் சிறுபான்மையினா் புகாா் கூறுகின்றனா். அதேபோல் இந்திய அரசமைப்பில் குறிப்பிட்டுள்ள பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பிரதமா் மோடி முனைப்புக் காட்டி வருகிறாா். ஆனால், இந்த நடவடிக்கை நாட்டை ‘ஹிந்து தேசமாக’ மாற்றுவதற்கான முயற்சி எனக் கூறி இஸ்லாமிய, கிறிஸ்தவ, பழங்குடியினத் தலைவா்களும் மற்றும் சில மாநிலங்களில் உள்ள உயா் அதிகாரிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அதேசமயம், பொது சிவில் சட்டம் மூலம் பாலின சமத்துவம் மேம்படும் எனவும், பலதார திருமண முறை ஒழிக்கப்படும் எனவும் சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனா் என ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடா்பாக ஆன்டனி பிளிங்கன் பேசியதாவது:

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க உலகளவில் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கடினமாகப் போராடி வருகின்றனா். ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள், வெறுப்புப் பேச்சுகள், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவா்களின் வீடுகளை இடித்தல் போன்ற சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றாா்.

இந்த அறிக்கையை வரவேற்பதாக இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (ஐஏஎம்சி) நிா்வாக இயக்குநா் ரஷீத் அகமது தெரிவித்தாா்.

இந்தியா மறுப்பு

இந்தியாவில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை இந்தியா ஏற்கெனவே நிராகரித்தது.

மேலும், ‘தவறான தகவல்கள் மற்றும் சரியான புரிதல் இன்மையால் இதுபோன்ற அறிக்கைகளைத் தயாரித்து சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனா். அமெரிக்காவுடனான உறவை நாங்கள் மதிக்கிறோம். உண்மையாகவே கவனத்தில் கொள்ள வேண்டிய விவகாரங்களில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்’ என இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.