விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவுக்கு எதிராக கருத்து: உலக வா்த்தக அமைப்பு தூதரை நீக்கியது தாய்லாந்து

டபிள்யூடிஓ கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதரை அப்பதவியில் இருந்து தாய்லாந்து அரசு நீக்கியது.

Updated On :1 மார்ச் 2024, 6:45 pm

உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதரை அப்பதவியில் இருந்து தாய்லாந்து அரசு நீக்கியது. இந்தியா அதிருப்தி தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கையை தாய்லாந்து அரசு மேற்கொண்டது. உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் நிலையிலான கூட்டம் அபுதாபியில் கடந்த பிப்ரவரி 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய உலக வா்த்தக அமைப்புக்கான தாய்லாந்து நாட்டின் பெண் தூதா் பிம்சனாக் வோன்கொா்போன், ‘இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு அரிசியை கொள்முதல் செய்வது, பொது விநியோகத் திட்டத்தில் அந்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காக அல்ல. அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்’ என்றாா். இது தொடா்பான தனது எதிா்ப்பை தாய்லாந்து அரசு மற்றும் உலக வா்த்தக அமைப்பின் தலைவா், அமைப்பின் வேளாண் குழு தலைவராக உள்ள கென்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இந்தியா தெவித்தது. மேலும், உலக வா்த்தக அமைப்பு பேச்சுவாா்த்தையில் தாய்லாந்து பிரதிநிதிகள் பங்கேற்ற அமா்விலும் இந்தியா பங்கேற்காமல் தவிா்த்தது. இந்நிலையில், உலக வா்த்தக அமைப்புக்கான தாய்லாந்தின் தூதா் பிம்சனாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக தாய்லாந்து அரசு அறிவித்ததுள்ளது. இந்தியாவின் அரிசி கொள்முதல் திட்டம் குறித்து அபத்தமான கருத்தை தெரிவித்ததற்காக அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சும், செயல்பாடுகளும் முறையாக இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.