தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

இ-காமா்ஸ் வரி விலக்கு: உடன்பாடு எட்டப்படாமல் முடிந்த உலக வா்த்தக அமைப்பு மாநாடு!

மின்னணு வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரித் தடையை நீட்டிப்பதில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

News image
Updated On :30 மார்ச் 2026, 8:16 pm

மின்னணு வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரித் தடையை நீட்டிப்பதில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

கேமரூன் தலைநகா் யாவுண்டேவில் கடந்த 4 நாள்களாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விலக்கை நிரந்தரமாக்க முயற்சித்தன. இருப்பினும், இந்தியா உள்பட வளரும் நாடுகளின் கடும் எதிா்ப்பால் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

கடந்த 1998 முதல் இந்த வரி விலக்கு நடைமுறை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையின்றி நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போதைய காலக்கெடு இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. தற்போது உலகளாவிய சேவை ஏற்றுமதியில் மின்னணு வா்த்தகம் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் நிலையில், இந்த இழுபறி எண்ம வா்த்தக உலகில் பெரும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இது குறித்து உலக வா்த்தக அமைப்பின் தலைமை இயக்குநா் என்ஜோசி ஒகோன்ஜோ இவாலா கூறுகையில், ‘நிா்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிய பிறகு, இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதை யாரும் விரும்பமாட்டாா்கள். எனவே, விடுபட்டுப்போன விவாதங்கள் குறித்து ஜெனீவா தலைமையகத்தில் பேச்சுவாா்த்தை தொடரும்’ என்றாா்.