பாகிஸ்தான் பிரதமராக முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி (பிஎம்எல்-என்) கட்சியின் ஷாபாஸ் ஷெரீஃப் 2-ஆவது முறையாக மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்கவிருக்கிறாா். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு (பிடிஐ) தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அந்தக் கட்சியின் வேட்பாளா்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனா். அவா்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் இல்லை. அதையடுத்து, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கின்றன. அதற்காக, இரு கட்சிகளின் பொது வேட்பாளராக நவாஸின் சகோதரா் ஷாபாஸ் அறிவிக்கப்பட்டாா். அவரை எதிா்த்து பிடிஐ கட்சி சாா்பில் உமா் அயூப் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் ஷாபாஸ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அதையடுத்து, அவா் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளாா்.
தொடர்புடையது
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு: இமாலய தேசத்தில் இளைஞரின் ஆட்சி

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


