ஆறு மாத விண்வெளி பயணம்: பூமி திரும்பிய வீரர்கள்!

விண்வெளி நிலையத்தில் ஆறு மாத காலம் செலவிட்டு நான்கு வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினர்!
விண்வெளி வீரர்கள்
விண்வெளி வீரர்கள்NASA/ AP

ஆறு மாத விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் செவ்வாய்கிழமை திரும்பினர்.

அவர்கள் தரைவிறங்கிய கேப்சுல் விடியலுக்கு முன்பு அமெரிக்காவில் வானில் ஒளிக்கீற்றாக தென்பட்டது. மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியுள்ளனர்.

தரையிறங்கிய கேப்சுலை மீட்கும் பணியாளர்கள்
தரையிறங்கிய கேப்சுலை மீட்கும் பணியாளர்கள்NASA/ AP

நாசாவின் கடல் ஹெலிகாப்டர் விமானி ஜேஸ்மின் மொக்பெலி, டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மோகன்சென், ஜப்பானைச் சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவை சேர்ந்த கான்ஸ்டாண்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.

4 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நாசாவின் திட்டத்திற்காக பயணித்தது இதுவே முதல்முறை.

கடந்த ஆகஸ்டில் விண்வெளிக்கு சென்றவர்கள் ஆறு மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனர்.

இவர்களுக்கு மாற்றாக புதிதாக 4 பேர் கடந்த வாரம் விண்வெளி நிலையத்துக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com