

விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர்.
நாசாவை சேர்ந்த மைக் பின்க், சேனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஒலெக் ஆகிய நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகள் மேற்கொள்வதற்காக 2025-ல் ஆகஸ்ட் முதல் தேதியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.
ஆறு மாதங்கள் தங்கி, ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நால்வரில் ஒருவருக்கு ஜன. 7 ஆம் தேதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அன்றைய நாளில் மேற்கொள்ளவிருந்த நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நால்வரையும் பூமிக்கு திரும்புமாறு நாசா முடிவெடுத்து, நால்வரும் இன்று (ஜன. 15) காலை பத்திரமாக பூமி வந்தடைந்தனர்.
விண்வெளி வீரர்கள் முன்கூட்டிய வருகை, அவசர நிலை இல்லை; ஒரு முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே என்று விவரித்த நாசா, யாருக்கு உடல்நலக் குறைவு என்பதையும், எம்மாதிரியான பிரச்னை என்பதையும் தனியுரிமை காரணங்களால் வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.