

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவால் தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகள் உள்பட மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படும் குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்பட 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற விரும்பும் மக்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியே மேற்கண்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் மக்களுக்கு விசா வழங்குதல் நிறுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை வரும் ஜன. 21 முதல் அமலாகிறது.
இதனால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த மொத்தம் 75 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியா அந்தப் பட்டியலில் இல்லாததால், இந்த உத்தரவால் அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்குப் பாதிப்பில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.