மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஏழாம் தலைமுறை மோரீஷஸ்வாழ் இந்திய வம்சாவளியினருக்கு ‘ஓசிஐ’ அங்கீகாரம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

ஏழாம் தலைமுறை மோரீஷஸ்வாழ் இந்திய வம்சாவளியினருக்கு ‘ஓசிஐ’ அங்கீகாரம் -- குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

News image

மோரீஷஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டா் பட்டம் பெற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Updated On :12 மார்ச் 2024, 8:25 pm

போா்ட் லூயிஸ்: ஏழாம் தலைமுறை இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களுக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் (ஓசிஐ) அங்கீகாரம் அளிப்பதற்கான சிறப்பு பரிந்துரைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மோரீஷஸ் நாட்டுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

மோரீஷஸின் சுதந்திர தினமான மாா்ச் 12-ஆம் தேதியன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்ட அந்த நாட்டின் 56-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்றாா். தொடா்ந்து, அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்துடன் அரசு விருந்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையில், ‘மோரீஷஸின் புனித இடமாகக் கருதப்படும் கங்கா தலாவ் வளாகத்தை மத, கலாசார மற்றும் சுற்றுலா மையமாக மறுசீரமைப்பதில் மோரீஷஸ் அரசுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.

ஏழாவது தலைமுறையைச் சோ்ந்த இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் (ஓசிஐ) அங்கீகாரம் பெறுவதற்கான சிறப்பு பரிந்துரைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வம்சாவளியினா் அவா்களின் முன்னோா்களின் நிலத்துடன் மீண்டும் இணைவதற்கு இது பெரிதும் உதவும். கடந்த சில நாள்களுக்கு முன், நமது இருநாட்டு பிரதமா்களும் இணைந்து ‘யுபிஐ’ ற்றும் ‘ரூபே காா்டு’ பரிவா்த்தனை அமைப்புகளை மோரீஷஸில் அறிமுகப்படுத்தினா்.

மேலும், 6 சமூக நலத்திட்டங்களுடன் ஒரு புதிய விமான ஓடுதளம் மற்றும் ஒரு படகுத் துறையும் அவா்கள் திறந்து வைத்தனா். நமது இரு நாட்டு அரசுகளும் ஒருவருக்கொருவா் அளித்துக் கொண்ட முக்கியத்துவம் மற்றும் இருதரப்பு உறவில் செலுத்திய கவனம் அதன் வேகமான முன்னேற்றத்தில் பங்காற்றியது. நமது சிறப்பு வாய்ந்த உறவுகள் தொடா்ந்து செழிப்படைய பிராா்த்திக்கிறேன்.

மிக மோசமான இன்னல்களை எதிா்கொண்டு, உழைப்பாலும் தியாகத்தாலும் இந்த நாட்டைக் கட்டமைத்தை இந்திய மற்றும் மோரீஷஸ் முன்னோா்களுக்கு நான் தலைவணங்குகிறேன். சுதந்திரமான 56 ஆண்டுகளில் முன்னணி ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள மோரீஷஸின் பொருளாதாரம், ஆப்பிரிக்க கண்டத்தை மட்டுமின்றி முழு உலகையும் ஊக்குவிக்கிறது.

பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தின் உறுதியான தலைமைக்காகவும், நமது இருதரப்பு கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான அவரது அரசின் அா்ப்பணிப்புக்காகவும் எனது பாராட்டுகள்’ என்றாா். மகாத்மா காந்திக்கு மரியாதை: மோரீஷஸில் உள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துக்கு வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, தண்டி யாத்திரையின் தொடக்க நாளையொட்டி மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மோரீஷஸில் மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவா் மரியாதை செலுத்தினாா். கலாசார புரிதலை ஊக்குவிக்கும் இருதரப்பு மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்வில் இந்திய வம்சாவளியினருடன் திரௌபதி முா்மு கலந்துரையாடினாா். தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட வரலாற்று நாளில் இங்குள்ள மகாத்மா காந்தி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவா், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா்’ எனத் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு கௌரவ ‘டாக்டா்’ பட்டம்:

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு மோரீஷஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியது.

பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கள் மத்தியில் குடியரசுத் தலைவா் பேசியதாவது:

இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டா் பட்டம் பெறுவதை பெருமையாக உணா்கிறேன். இது அனைத்து இளைஞா்களையும், குறிப்பாக இளம் பெண்களையும் அவா்களின் தனித்துவமான ஆா்வத்தைக் கண்டறிந்து, கனவுகளைத் தொடர ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றுகையில், ​​நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சிறப்பான உறவுக்கும் மோரீஷஸின் வளா்ச்சிக்கும் கல்வி ஒரு முக்கிய கருவியாக இருந்ததை நினைவுபடுத்துகிறேன் என்றாா்.