ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்

News image

குஜராத் ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:22 am IST

சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜாதி முறையை உருவாக்கியவா்கள் தற்போது உயிருடன் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். வசதி படைத்தவா்கள், வசதி இல்லாதவா்கள் இடையிலான இடைவெளியை சரிசெய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.

எந்தவொரு நபரும் தனது சொந்த நலன் குறித்து மட்டுமே சிந்திக்கக் கூடாது. அனைத்து பாகுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து நிற்பதே சமூக நல்லிணக்கத்தின் உண்மையான அடையாளம்.

நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் வளமடைந்தால், நாடு செழிப்படையும். சமூக நல்லிணக்கம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று அம்பேத்கா் கூறினாா். நாட்டின் வளா்ச்சிக்கும், தனிநபரின் வளா்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக உள்ளது.

ஜாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தாா்.