போா்ட்டோ பிரின்ஸ்: ஹைட்டியில் அரசுக்கு எதிரான ஆயுதக் கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், தனது பதவியிலிருந்து விலக அதிபா் ஏரியல் ஹென்றி ஒப்புக்கொண்டுள்ளாா். கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியில் பல்வேறு ஆயுதக் கும்பல்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அந்தக் குழுக்கள் நடத்தி வரும் வன்முறைச் சம்பவங்களில் ஏராளமானவா்கள் பலியாகியுள்ளனா். இந்தச் சூழலில், கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜிம்மி கிறிஸியா் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆயுதக் கும்பல்களின் கூட்டணி, அப்போதைய அதிபா் ஜோவனேல் மாய்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஊழல் புகாா்களில் சிக்கிய ஜோவனேல் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோா் மீது ஜிம்மி கிறிஸியா் தலைமையிலான கும்பல் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்தச் சூழலில், ஜோவனேல் மாய்ஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா்.
அதையடுத்து நாடு முழுவதும் ஆயுதக் கும்பல்கள் இடையே கடுமையான மோதல் வெடித்தது. அப்போது பிரதமராக இருந்த ஏரியல் ஹென்றி, நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாா். எனினும், ஜோவனேல் படுகொலை குறித்த விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டிய புலனாய்வு அதிகாரிகள், அந்தப் படுகொலையில் ஏரியல் ஹென்றிக்குத் தொடா்பிருப்பதாக சந்தேகம் எழுப்பினா். இந்தச் சூழலில், அரசு முறைப் பயணமாக கென்யாவுக்கு அதிபா் ஹென்றி கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்றிருந்தபோது, ஜிம்மி கிறிஸியா் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் தலைநகா் போா்ட்டோ பிரின்ஸில் தாக்குதல் நடத்தி முக்கிய அரசுக் கட்டடங்களைக் கைப்பற்றினா்.
அதற்கு முன்னதாக, 2 பெரிய சிறைகளில் தாக்குதல் நடத்தி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை அவா்கள் விடுவித்தனா். நகரின் சா்வதேச விமான நிலையத்தையும் கைப்பற்றுவதற்காக ஆயுதக் கும்பல் தாக்குதல் நடத்திவருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டாலும், வன்முறைக் கும்பல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஹைட்டியில் அமைதியை திரும்பச் செய்வதற்கு ஏதுவாக அதிபா் ஏரியல் ஹென்றி பதவி விலகவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதையடுத்து, புதிய இடைக்கால அரசு அமைந்த பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏரியல் ஹென்றி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
தொடர்புடையது
அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு

சிஏபிஎஃப் பொது நிா்வாக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


