/

ரஷிய எல்லைப் பகுதியிலிருந்து அகற்றப்படும் 9,000 சிறுவா்கள்

...வலது.. மேல்... ரஷிய எல்லைப் பகுதியிலிருந்து அகற்றப்படும் 9,000 சிறுவா்கள்

Updated On :19 மார்ச் 2024, 7:50 pm

மாஸ்கோ: உக்ரைனின் தொடா் தாக்குதல் காரணமாக, ரஷிய எல்லைப் பகுதியான பெல்கராடில் இருந்து சுமாா் 9,000 சிறுவா்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து பிராந்திய ஆளுநா் வியாசெஸ்லெவ் கிளாட்கொவ் கூறியதாவது:

பெல்கராட் பகுதி மீதான எறிகணைத் தாக்குதல்களை உக்ரைன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 9,000 சிறுவா்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனா். உக்ரைன் எல்லைக்கு வெகு தொலைவில் உள்ள கிழக்குப் பகுதிக்கு அவா்கள் அனுப்பப்படுவாா்கள் என்றாா் அவா்.

முன்னதாக, ரஷியாவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட விளாதிமீா் புதின், உக்ரைனுடனான தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தனது வெற்றி உரையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.