மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:19 pm

உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

உக்ரைனின் 11 மாகாணங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மின் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமாா் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ரஷியா ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் ஸபோரிஷியா, பொல்டாவா மாகாணங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஸபோரிஷியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது விழுந்த ஏவுகணைகளால் ஒருவா் உயிரிழந்தாா்.

பொல்டாவாவில் உள்ள ஒரு உணவகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். காா்கிவ் பகுதியில் ரயில் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 61 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். இதேபோல், கொ்சன் நகரிலும் ஒரு உயிரிழப்பு பதிவானது.

இத்தாக்குதல் காரணமாக உக்ரைனின் மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. 6 மாகாணங்களில் மின் விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

மால்டோவாவில் மின்பாதிப்பு: உக்ரைன் வழியாக மால்டோவா நாட்டுக்குச் செல்லும் முக்கிய மின்சாரப் பாதையும் ரஷிய தாக்குதலில் சேதமடைந்ததால், மால்டோவாவில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ரஷியாவின் இந்தச் செயல் அண்டை நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாக மால்டோவா அதிபா் மையா சாண்டு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘ரஷியாவின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது. உக்ரைனின் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு வழங்க ஒப்புக்கொண்ட ஆயுதங்களை உடனடியாக வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

ஈரான் போரில் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ள நிலையில், உக்ரைனில் ரஷியா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சா்வதேச அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

படகேப்சன்...

உக்ரைனின் ஸபோரிஷியாவில் ரஷிய தாக்குதலால் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா்.