அதிகரிக்கும் துப்பாக்கி உரிமையாளர்கள் எண்ணிக்கை: ஆபத்து என்ன?

உரிமம் பெற்ற இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்
பழைய ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனரைக் கைது செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்
பழைய ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனரைக் கைது செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்AP

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய அத்துமீறலுக்கு பிறகு 1 லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய இடாமர் பென்-க்விர், இதுவொரு மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ”இன்றைக்கு இஸ்ரேல் தெருக்களில் மக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதைப் பார்க்கிறோம், அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் தடுக்கவும் அவர்களால் முடியும்” என தெரிவித்தார்.

போருக்கு முன்னர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீவிர தேசியவாதியான பென்-க்விர் இஸ்ரேலியர்களை ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

போர் ஆரம்பித்த பிறகு இஸ்ரேலியர்கள் ஆயுத உரிமங்கள் பெறுவதற்கான நடைமுறையை இஸ்ரேல் நாடாளுமன்றம் எளிதாக்கியது.

இன்னும் கூடுதலாக 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் அபரிமிதமான எண்ணிக்கையில் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பது எதிர்பாராத துப்பாக்கிச்சூடு, வன்முறை மற்றும் உள்ளூர் மீறல்களுக்கு வழிவகுக்கும் என உரிமைகள் சார்ந்த குழுக்கள் எச்சரித்துள்ளன.

பழைய ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனரைக் கைது செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்
இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கேட்டு குவிந்த விண்ணப்பங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com