இஸ்ரேல் தாக்குதல் 28 பேர் பலி: மருத்துவமனைக்கு வெளியே இறுதி மரியாதை!

காஸாவில் மூன்று தாக்குதல்கள்: 28 பேர் உயிரிழப்பு, உறவினர்கள் இறுதி அஞ்சலி
ராபாவில் பலியானவர்களின் உறவினர்கள்
ராபாவில் பலியானவர்களின் உறவினர்கள்AP

மத்திய காஸா மருத்துவமனைக்கு வெளியே மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 28 பேருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர்களது உறவினர்கள் புதன்கிழமை திரண்டனர்.

முந்தைய இரவில் இருந்து நகர்ப்புற அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர்.

நுஸைரத் நகர்ப்புற அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வீடுகள் தரைமட்டமானகின. இதில் 5 பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரழந்தனர். ஒருவர் மற்றொரு முகாமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். புரிஜ் முகாமில் 3 பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவில் தகர்க்கப்பட்ட கட்டடங்கள்
காஸாவில் தகர்க்கப்பட்ட கட்டடங்கள்AP

நுஸைரத் மற்றும் புரிஜ் பகுதிகள் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

1948-ல் இஸ்ரேல் உருவான போதான போரில் 7 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்த காஸாவின் பகுதிகளில் மக்கள் திரள் அதிகம் கொண்ட நகரங்கள் இவை இரண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com